லண்டனுக்கு கடத்தப்பட்ட தமிழக சிலைகள்.. 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு..!

0 2817
தமிழக கோவிலில் இருந்து இங்கிலாந்திற்கு கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகள், 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழக கோவிலில் இருந்து இங்கிலாந்திற்கு கடத்தப்பட்ட 3 வெண்கல சிலைகள், 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் லண்டனைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகிய 3 வெண்கலச் சிலைகள் விற்பனைக்கு உள்ளதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்த சிலைகள் தமிழகத்தை சேர்ந்தது என சிங்கப்பூரில் வசித்து வரும் விஜயகுமார் என்பவர், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அனுப்பினார். விசாரணையில், அந்த சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம் அனந்தமங்கலத்தில் அமைந்துள்ள, விஜயநகர காலத்தை சேர்ந்த கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிலைகள் மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. தொடர்ந்து, காணொலி வாயிலாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் முன்னிலையில், தமிழக அரசின் பிரதிநிதிகளிடம் 3 சிலைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments