கடந்த 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு- அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 4,132 பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழந்துள்ளதாக, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுதொடர்பாக பேசிய அவர், 2017 முதல் 2019 வரை அதிகபட்சமாக சிஆர்பிஎப் படையைச் சேர்ந்தவர் 1,597 பேரும், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 725 பேரும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 671 பேரும், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 429 பேரும், பணியின் போது உயிரிழந்ததாக நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
கொரோனாவால் 100 மத்திய ஆயுதப் படை போலீசார் இறப்பு
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 100 போலீசார் உயிரிழந்ததாக, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் எழுப்பபட்ட கேள்விக்கு எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
எல்லைப் பாதுகாப்புப் படையில் 23 பேரும், ரிசர்வ் போலீஸ் படையில் 35 பேரும், தொழில்துறைப் பாதுகாப்புப்படையில் 24 பேரும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையில் 7 பேரும், சசஸ்த்ர சீமா பல் மற்றும் அசாம் ரைபிள்ஸில் தலா ஐந்து பேரும் இறந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Comments