ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் சோதனையை மீண்டும் தொடங்க சீரம் நிறுவனத்திற்கு அனுமதி
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குறிப்பிட்ட நபருக்கு வேறு சில பிரச்னைகள் இருந்ததாக இந்தியா மற்றும் இங்கிலாந்தின், தடுப்பூசி தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் அளித்த பரிந்துரையை ஏற்று, விதிகளை பின்பற்றி சீரம் நிறுவனம் மீண்டும் தடுப்பூசி சோதனையை தொடங்கலாம் என, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
DCGI gives nod to Serum Institute to restart phase 2, 3 trials for COVID-19 vaccine
— ANI Digital (@ani_digital) September 15, 2020
Read @ANI Story | https://t.co/6l14EOInG6 pic.twitter.com/Nmli0gV33k
Comments