தொடர் கனமழை - பேரிரைச்சலுடன் பாயும் கிருஷ்ணா ஆறு
ஆந்திர மாநிலத்தில், பிரகாசம் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு, கிருஷ்ணா ஆற்றில், வெள்ளம் பேரிரைச்சலுடன் பாய்கிறது. கிருஷ்ணா நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் அணை நிரம்பியது.
இதையடுத்து, செவ்வாக்கிழமை முற்பகலில், பிரகாசம் அணையின் பாதுகாப்பு கருதி, அணையின் 70 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. அணையிலிருந்து பாயும் வெள்ளத்தால், கிருஷ்ணா ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
#WATCH Andhra Pradesh: 70 gates of Prakasam barrage on Krishna river at Vijayawada lifted to release huge inflow of floodwater from upper areas, following incessant rainfall in the region. People living in low-lying areas alerted. Control rooms set up in all divisional offices. pic.twitter.com/XTrG0tceVd
— ANI (@ANI) September 15, 2020
Comments