லடாக்கிலிருந்து, அருணாச்சல் எல்லைக்கு கவனத்தை திருப்பிய சீனா

0 19431
லடாக்கிலிருந்து, அருணாச்சல் எல்லைக்கு கவனத்தை திருப்பிய சீனா

அருணாச்சல் பிரதேச எல்லையில், சீன துருப்புகள் நடமாட்டத்தால் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.

இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், அருணாச்சல பிரதேசத்தின் ஆசாபிலா, டுட்டிங் அச்சு, சாங் ட்சே மற்றும் பிஷ்டைல் 2 ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், சீனா தனது ராணுவ வீரர்களை குவித்து வருவதாக கூறியுள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே, சீன துருப்புகள் நடமாட்டத்தால், இந்தியாவும், படைகளையும், டாங்குகளையும், அதிக எண்ணிக்கையில் நகர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, டோக்லாம் பகுதியில் மீண்டும் சீனா துருப்புகளை அதிகப்படுத்தியதால், அங்கும், இந்தியா படை பலத்தை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments