கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் சைவத்துக்கு மாறும் சீனர்கள்
சீனாவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ள நிலையில், தாவரங்கள் அடிப்படையிலான இறைச்சி உணவுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியோண்ட் மீட் இன்க் என்ற நிறுவனம், சீனா முழுவதும் தாவரங்களை அடிப்படையாக கொண்ட இறைச்சி உணவுகளை விற்பனை செய்ய ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துடன் கையெழுத்திட்டுள்ளது. அதே போல், பெய்ஜிங்கைச் சேர்ந் ஜென் மீட் நிறுவனம், சோதனை முறையில் சைவ மீட்பால்ஸ் விற்பனையை தொடங்கி உள்ளது.
அசைவ இறைச்சி பொருட்களுக்கு நிகரான சுவை, சைவ இறைச்சியில் கிடைப்பதால் பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments