கொரோனாவை கட்டுப்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்காற்றும் - பில்கேட்ஸ்
உலகளவில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்காற்ற போவதாக உலகப் பெரும் பணக்காரர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகப்போருக்கு பின், தற்போது மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டால், அது இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, பல வளரும் நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் பணக்கார நாடுகளுக்கு மட்டும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யாமல், அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க இந்தியா வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
COVID-19 has set global health progress back decades: Gates Foundation https://t.co/lc7I6CTESx pic.twitter.com/aoyW2giarI
— Reuters (@Reuters) September 15, 2020
Comments