சுஷாந்தின் உடல் உறுப்புகளை மறுஆய்வுக்கு உட்படுத்திய சோதனை முடிவை வைத்து போதைப்பொருள் பயன்படுத்தினாரா என ஆராய முடிவு
சுஷாந்தின் உடல் உறுப்புகளை மறுஆய்வுக்கு உட்படுத்திய சோதனை முடிவுகள் செப்டம்பர் 17ம் தேதி தயாராகிவிடும் என்றும், அதை வைத்து அவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுஷாந்தில் உடலை பிரேத பரிசோதனை செய்த போது சேகரித்து வைக்கப்பட்ட, உள்ளுறுப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் நிபுணர்கள் மூலம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை குறித்த அறிக்கை வரும் 17 அல்லது 20ம் தேதிக்குள் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனடிப்படையில் சுஷாந்த் போதை பொருட்கள் எதையும் பயன்படுத்தினாரா என ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
Comments