டெட் லைன் தினத்தில் டீலிங் ஓவர் - அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனத்துக்குக் கைமாறும் டிக்டாக்!!

0 3068
Oracle Tiktok

மெரிக்காவில் டிக்டாக்கைக் கையகப்படுத்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் டிக்டாக்கின் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. தற்போது அமெரிக்க அரசின் ஒப்புதலுக்காக இரு நிறுவனங்களும் காத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அமெரிக்க அரசு தடை விதித்தது. இதையடுத்து டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்துக்கு செப்டம்பர் 15- க்குள் விற்க வேண்டும். இல்லையேல் டிக் டாக்குக்கு அமெரிக்காவில் நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும் என்று கெடு விதித்திருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

டிக்டாக்கை விலைக்கு வாங்கும் விவகாரத்தில் மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் இடையே போட்டி ஏற்பட்டது. கடந்த மாதத்தில் டொனால்ட் டிரம்ப்,  ‘டிக் டாக்கை ஆரக்கிள் வாங்குவதே சரியாக இருக்கும். மற்றவர்களை விடவும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு தான் டிக்டாக்கை நிர்வகிக்கும் திறன் இருக்கிறது’ என்று கடந்த மாதத்தில் டிரம்ப் கூறினார். இதையடுத்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு டிக்டாக் விற்கப்படாது என்று பைட்டான்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தான் ஆரக்கிள் நிறுவனம் டிக்டாக்குடன் பேசி டீலிங்கை முடித்துள்ளது.

அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்டீவன், “இந்த வாரம், பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்துக்கு இடையே முடிந்துள்ள ஒப்பந்தத்தை மதிப்பாய்வு செய்யவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு இழுபறிக்குப் பிறகு, அமெரிக்காவில் டிக்டாக் கைமாறவுள்ளதால் பைட் டான்ஸ் நிறுவனம் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments