விமான சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தவும், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கவும் வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
விமான சீர்திருத்த மசோதா 2020 என்ற பெயரிலான இந்த மசோதாவின் படி, ராணுவத்திற்கு சொந்தமான விமானங்களுக்கு இனிமேல் 1934 விமானச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
விமான போக்குவரத்து துறையில் விதி மீறல்களுக்கான அபராத தொகையை 10 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடியாக உயர்த்தவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. மக்களவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
Comments