கீழடி அகழாய்வு பணியின் போது 2 அடுக்கு உறைகிணறு கண்டெடுப்பு

0 8002
கீழடி அகழாய்வு பணியின் போது 2 அடுக்கு உறைகிணறு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணியின் போது முதன் முறையாக இரண்டு அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கீழடியில் உலைகலன், விலங்கின் எலும்பு, எடை கற்கள், பாசிகள், வளையல்கள், இணைப்பு பானைகள் ஆகியவை கிடைத்துள்ளன.

கடந்த சில நாட்களாக மேலும் 2 குழிகள் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், அதில் 2 அடுக்கு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மணலூர் பகுதியில் 5 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வு பணியில் தாமிரத்தால் செய்யப்பட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments