போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகளின் தலைமுடி, இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஐதராபாத் அனுப்பி வைப்பு

0 1884
போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகளின் தலைமுடி, இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக ஐதராபாத் அனுப்பி வைப்பு

போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் தலைமுடி மற்றும் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே மருத்துவப் பரிசோதனையில் குறைந்த அளவு போதைப்பொருள் பயன்படுத்தியது தெரிய வந்த நிலையில், துல்லியமான முடிவுகளை பெறுவதற்காக தலைமுடி பரிசோதனை செய்ய திட்டமிட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், மாதிரிகளை சேகரித்து ஐதராபாத்திலுள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பியுள்ளனர்.

ஒருவாரத்தில் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் வழக்கின் முக்கிய ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவின், வீடு மற்றும் ரிசார்ட்டில், காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வா, பிரபல நடிகர் விவேக்ஒபராயின் மைத்துனர் ஆவார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments