ம.பி.யில் மலிவு விலை விவசாய இயந்திரங்கள் வாங்கப்பட்டதில் ஊழல்?
மத்திய பிரதேச விவசாயிகளுக்காக மலிவு விலையில் சீனாவில் இருந்து விவசாய இயந்திரங்கள் வாங்கப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் கிருசி யோஜனா (Krishi Yantrikaran Yojna) திட்டத்தின்கீழ் பவர் டில்லர் (power tiller) இயந்திரங்கள் வாங்கப்பட்டு 2017 முதல் 2019 வரை விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன.
இதுகுறித்து ஆய்வு செய்து விசாரணை குழு அறிக்கை அளித்துள்ளதாகவும், அதில் பெரிய முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிக்கை குறித்து விசாரணை நடத்தப்படுமென மாநில தோட்டக்கலை அமைச்சர் பரத் குஸ்வாஹா (Horticulture Minister Bharat Kushwaha) அறிவித்துள்ளார்.
Comments