மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு கங்கனா மனு

0 1377
மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு கங்கனா மனு

மும்பை மாநகராட்சியிடம் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் இந்தி நடிகை கங்கனா ரணாவத் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்குபாந்த்ராவில் உள்ள திரைப்பட தயாரிப்பு அலுவலகம் செயல்பட்ட பங்களா சட்டவிரோதமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறி, அதை இடிக்கும் பணியில் மாநகராட்சி 9ம் தேதி ஈடுபட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், அந்நடவடிக்கைக்கு தடை விதித்தது.

ஏற்கெனவே இதில் மனு தாக்கல் செய்த நிலையில், தற்போது சில திருத்தங்களை செய்து புதிதாக கங்கனா மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், 40 சதவீத பங்களா இடிக்கப்பட்டுள்ளதாகவும், சோபா, சான்ட்லியர் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments