தங்க கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிராக 2000 ஜிபி டிஜிட்டல் ஆதாரங்கள்-என்ஐஏ
தங்க கடத்தல் வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக 2000 ஜிபி (GB) அளவிற்கு டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.
சொப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் செல்போன், லேப்டாப் பதிவுகளில் இருந்து அவை சேகரிக்கப்பட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. இன்று நீதிமன்றத்தில் சொப்னா சுரேஷ், முகம்மது அன்வர் இருவரைத் தவிர ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரை வரும் வெள்ளிக்கிழமை வரை என்ஐஏ கஸ்டடியில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நெஞ்சுவலி காரணமாக திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சொப்னா சுரேஷ், ஆஞ்சியோகிராம் நடத்தப்பட்டபிறகு, மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
Comments