மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு அனுமதிக்காது

0 891

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக அரசு எந்தவகையிலும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெறும் நோக்கில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்திக்க இருப்பதாக கூறினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டக்கூடாதென உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியிருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments