சென்னைப் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு
ஆன்லைனில் நடைபெறும் இறுதி செமஸ்டர் தேர்வின் போது, இணையத்தில் பதிவேற்ற முடியாத நிலையில் விடைத்தாள்களை, மாணாக்கர்கள் விரைவுத் தபால் மூலமாக கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
காலை 10 முதல் 11.30 மணி வரையும், பகல் 2 முதல் 3.30 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வும் 90நிமிடங்கள் Pen and Paper mode-ல் நடக்கிறது. வினாத்தாள் தரவிறக்கத்துக்கான இணைப்பு மொபைலில் அனுப்பப்படும்.
விடை எழுதும் A4 தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவரின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவும், 18 தாள்களுக்கு மிகாமல் எழுதவும், தேர்வு எழுதி 3 மணி நேரத்திற்குள் உரிய வடிவங்களில் மாற்றி பதிவேற்றம் செய்து அதன் விவரத்தை தெரிவிக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments