நீதிமணி தொடங்கிய நிதி நிறுவனம்... பணத்தை பறி கொடுத்தவர்கள் தவிப்பு!

0 6273

ராமநாதபுரத்தில் நீதிமணி என்பவர் தொடங்கிய நிதி நிறுவனத்தின் முதலீடு செய்த மக்கள் பணத்தை திரும்ப பெற நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,  'ராமநாதபுரத்தில்  நீதிமணி மற்றும் ஆனந்த் ஆகியோர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பாக பணம் தருவதாக விளம்பரம் செய்தனர். இதை நம்பிய நான் கடந்த 19.9.2019-ல் 50 லட்சம் முதலீடு செய்தேன். ஒப்புதல் பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி மதிப்புள்ள காசோலைகள் தந்தனர்.

ஒரு ஆண்டுக்கு முடிந்ததும் காசோலையை வங்கியில் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளுமாறும் தெரிவித்தனர். இந்நிலையில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து  நீதிமணியும் ஆனந்தும் கைது செய்யப்பட்டனர்.   தற்போது, இருவரும் ஜாமீனில் வெளி வந்து வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்புள்ளது. எனவே நீதிமணி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்"
என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து நீதிபதி பொங்கியப்பன் இந்த மோசடியில் எத்தனைபேர் ஈடுபட்டுள்ளனர்? எவ்வளவு பணம்  எத்தனை பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்  இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்த நீதிபதி வழக்கை அக்டோபர்  14- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments