லடாக் எல்லையில் ஆப்டிகல் கேபிள்களை பதிக்கும் சீன ராணுவம்
கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்க, லடாக் பகுதிகளில் சீன ராணுவம் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாங்கோங் ஏரியின் தெற்கு கரையில் இருக்கும் சீன ராணுவ வீரர்களின் தொலைத்தொடர்பு வசதிக்காக இந்த கேபிள்கள் பதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் பாங்கோங் ஏரியின் வடக்குக் கரையில் இதைப் போன்ற கேபிள்களை சீன ராணுவம் பதித்தது.
இந்த ஆப்டிக் கேபிள் இணைப்பு வாயிலாக படங்கள் மற்றும் ஆவணங்களை விரைவாக அனுப்ப முடியும். ரேடியோ செய்திகளை எளிதில் உளவு பார்க்க முடியும் என்பதால், ராணுவத் தகவல்களை பாதுகாப்பாக அனுப்ப சீன ராணுவம் இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறப்படுகிறது.
Comments