36வது பிறந்தநாளை கொண்டாடிய இங்கிலாந்தின் இளவரசர் ஹாரி
இங்கிலாந்து இளவரசரும் அரசக் கடமைகளில் இருந்து விலகியவருமான ஹாரி தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார்.
இளவரசர் சார்லஸ் மற்றும் டயானாவுக்கு 1984 ஆம் ஆண்டு பிறந்த ஹாரி ராணுவத்தில் சேர்ந்தது, பொதுமக்களுடன் சகஜமாக பழகும் குணங்கள் உள்ளிட்டவற்றால் அரச குடும்பத்தின் மிகவும் பிரபலமான உறுப்பினர்களில் ஒருவராக அறியப்பட்டார்.
அரியணை ஏறுவதற்கான வரிசையில் 6வது இடத்தில் இருந்த ஹாரி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசக் குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்க்கியுடன் கலிபோர்னியாவில் குடியேறினார்.
Comments