திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்

0 4198
திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 14001-2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 14001-2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இங்கு வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இங்குள்ள ரயில் நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சாரம், செடி, மரங்கள் வளர்ப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணச்சீட்டு முன்பதிவு வசதிகள், நீர் மேலாண்மை, பராமரிப்பு சிறப்பாக இருப்பதால் ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments