வரும் ஜனவரி 27- ஆம் தேதி சசிகலா விடுதலை... அடுத்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டியா?

0 8120

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15- ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளனர்.

நன்னடத்தையின் அடிப்படையில் சிறையிலிருந்து விரைவில் சசிகலா விடுவிக்கப்படுவார் என்கிற தகவல் வெளியாகியிருந்தது. இதற்கிடையே, பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் சசிகலா விடுதலையாகும் தேதியை அறிந்து கொள்ள ஆர்டிஐ மூலம்  மனு அனுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள கர்நாடக சிறை நிர்வாகம் சசிகலா வரும் 2021 ஜனவரி மாதம் 27 - ஆம் தேதி விடுதலை ஆகலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் சசசிகலா  கட்டவேண்டிய அபராத தொகையான ரூ. 10 கோடியை கட்டவில்லை. அபராத தொகையை கட்ட தவறினால் அவரது விடுதலையானுகும் நாள்  2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 - ஆம் தேதி ஆகும். அதாவது மேலும் ஒரு ஆண்டு காலம் அவர் சிறையில் இருக்க நேரிடும். 

சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை உறுதியான நாள் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ந் தேதி. அதன்படி நான்கு ஆண்டு சிறைத் தண்டனை முடிந்து அவர் விடுதலையாகும் நாள் என்பது 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ம் தேதி என கணக்கிடப்பட்டது.

இந்த வழக்குக்கு முன்பே 21 நாள்கள் சசிகலா உட்பட மூவரும் சிறையிலிருந்துள்ளார். அதனால், 2021-ல் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரோலை பயன்படுத்தியிருந்தாலும் சசிகலா விடுதலையில் தேதி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைவெறவிருப்பதால், ரூ. 10 கோடி அபாராதத்தொகையை உடனடியாக கட்டி தேர்தலுக்கு முன்னரே அவரை சிறையிலிருந்து விடுவிக்க சகிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலத்த அ.தி.மு.க கட்சி தி.மு.கவை மட்டுமல்லாமல் சசிகலாவையும் சேர்த்து எதிர் கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments