சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விளக்கம்

0 1573
சீனா உடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனா உடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு தரப்பிலும், பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்து, சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது என சீனாவிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

அதைதொடர்ந்து, இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே மாஸ்கோவில் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை நிறைவேற்றுவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக எல்லையில் கடந்த ஒரு வாரமாக சீன ராணுவம் எந்தவித அத்துமீறல்களிலும் ஈடுபடாமல் உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சீனா உடனான மோதல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

இதைதொடர்ந்து, எல்லையில் தற்போதைய நிலை குறித்து, ராஜ்நாத் சிங் இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments