உ.பி.,யில் வாரண்ட் இல்லாமல் சோதனை, கைது செய்தல் உள்ளிட்ட அதிகாரங்களுடன் புதிய பாதுகாப்புப் படை

0 3979

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை போல வாரண்ட் இல்லாமல் சோதனை செய்தல், கைது செய்தல் அதிகாரங்களுடன் உத்தர பிரதேசத்தில் புதிய பாதுகாப்புப் படையை அந்த மாநில அரசு அமைக்கவுள்ளது. உத்தர பிரதேச சிறப்பு பாதுகாப்புப் படை (The Uttar Pradesh Special Security Force ) என அப்படைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், அரசு நிர்வாக அலுவலக கட்டிடங்கள், மெட்ரோ நிலையங்கள், வங்கிகளின் பாதுகாப்புப் பணியில் அந்த படை ஈடுபடுத்தப்படவுள்ளது. சுமார் ஆயிரத்து 800 கோடியில் முதல்கட்டமாக அப்படையின் 8 பிரிவுகளை ஏற்படுத்தவுள்ளதாக உத்தரபிரதேச கூடுதல் தலைமை செயலர் அவனிஷ் அஸ்வதி (Awanish Awasthi) தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments