பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள், 24 ஆம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது...
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஒரு மணி நேரத் தேர்வாக ஆன்லைனில் நடைபெற உள்ளது.
40 Objective type வினாக்கள் கேட்கப்படும் என்றும், மாணவர்கள் ஏதேனும் 30 வினாக்களுக்கு விடையளித்தால் போதுமானது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. காலை 10 முதல் 11 மணி வரை, பகல் 12 முதல் 1 மணி வரை, பகல் 2 முதல் 3 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை என்று 4 கட்டங்களாக தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கான பிரத்யேக Log In ID, Password அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஒரு மணி நேரத் தேர்வு முழுவதையும் பேராசிரியர்கள், மண்டல அலுவலர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் கண்காணிப்பார்கள். தேர்வு நேரம் முழுவதும் மாணவர்கள் கேமராவை ஆன் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் தேர்வுக்கு முன்னர் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை Mock Test என்ற பயிற்சித் தேர்வு நடத்தப்படும் .
Comments