நாடு முழுவதும் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி..!

0 4444
நாடு முழுவதும் 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி

நாடாளுமன்ற மக்களவையில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பேரிடர் ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, இன்று தொடங்கியது.

முன்னதாக, இரு அவைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, பாஜக எம்.பி.க்கள் மீனாட்சி லேகி, அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 17 மக்களவை உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக பாஜகவில் 12 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments