கொரோனா பரவலை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உள்ளது - அமைச்சர் ஹர்ஷ வர்தன்
கொரோனா பரவலை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உள்ளது என சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கொரோனா பற்றி உரையாற்றிய அவர், 10 லட்சம் பேரில் 3,328 பேருக்கு தொற்று என உலகிலேயே மிகவும் குறைந்த விகிதங்களில் ஒன்றை இந்தியா சாதித்து காட்டியுள்ளதாக கூறினார்.
தமிழகம். ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்களில் அதிக தொற்றும், இறப்பு எண்ணிக்கையும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா பரவலுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவையில் அது குறித்த உரையை ஹர்ஷ வர்தன் நிகழ்த்தியுள்ளார்.
#WatchLive !!
— DrHarshVardhanOffice (@DrHVoffice) September 14, 2020
Statement by Union Health Minister Dr Harsh Vardhan regarding #CovidPandemic & the Steps taken by the Govt of India in #LokSabha@MoHFW_INDIA @PMOIndia #ParliamentSessionhttps://t.co/3jME7umm7t
Comments