பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை உளவுபார்க்கும் சீன நிறுவனம்

0 4052

பிரதமர் மோடி, தலைமை நீதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும், நிறுவனங்களையும் சீன நிறுவனம் ஒன்று உளவு பார்ப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

Shenzen நகரில் உள்ள Zhenhua Data Information Technology என்ற நிறுவனம் இந்த வேலையை செய்வதாக கூறப்படுகிறது. சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் , சோனியா காந்தி, பல மாநில முதலமைச்சர்கள், மத்திய கேபினட் அமைச்சர்கள், முப்படை தலைமை தளபதி, முன்னாள் தளபதிகள், தலைமை நீதிபதி போப்டே, டாடா உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரையும் இந்த நிறுவனம் உளவு பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Zhenhua நிறுவனத்திற்கு உலகம் முழுதும் 20 பிராசசிங் மையங்கள் உள்ளன. சீன அரசு மற்றும் ராணுவத்தை தனது வாடிக்கையாளர்களாக இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments