ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா : சீன ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் வூகான் ஆய்வகத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள சீன ஆய்வாளர் ஒருவர், தம்மிடம் அதற்கு அறிவியல் ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய வைரஸ் ஆய்வாளரும், பின்னர் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று, கொரோனா விவகாரத்தில் சீன அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருபவருமான டாக்டர் லி-மெங், பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஹாங்காக்கில் இருந்தபோது, சீனாவில் சார்ஸ் போன்ற வைரஸ் பரவத் தொடங்கியது குறித்த ஆய்வுக்கு தாம் நியமிக்கப்பட்டதாகவும், புது வைரஸ் பரவுவது குறித்து சீன அரசுக்கு முன்னரே தெரிந்திருந்ததோடு, அதை மூடிமறைக்க முயற்சித்ததை தமது ஆய்வில் கண்டறிந்ததாகவும் டாக்டர் லி-மெங் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரிலும், பின்னர் ஜனவரியிலும் ஆய்வு நடத்தி, தமது கண்காணிப்பாளராகவும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்த அதிகாரியிடம் அறிக்கை அளித்ததாகவும், அவரோ அதை வெளியில் சொன்னால் காணாமல் ஆக்கப்படுவாய் என மிரட்டியதாகவும் டாக்டர் லி-மெங் தெரிவித்துள்ளார்.
சீன ராணுவ ஆராய்ச்சி மையம் ஒன்று CC45 மற்றும் ZXC41 என்ற இரு கொரோனா வைரஸ்களை கண்டறிந்தது, அவற்றின் உயிரமைப்பை ஆய்வகத்தில் வைத்து மாற்றியே கோவிட்-19 வைரஸ் உருவாக்கப்பட்டது, விரைந்து பரவும் வகையில் அந்த வைரஸ் உருவாக்கப்பட்டது, உண்மையை மறைக்க வூகான் கடல் உணவுச் சந்தையில் இருந்து பரவியது போன்ற தோற்றத்தை உருவாக்கியது,
அதற்கு முன்னரே மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது என்ற விவரங்களை கண்டறிந்ததாகவும் அவர் விவரித்துள்ளார். ஹாங்காக்கில் சில விஞ்ஞானிகளுடன் இணைந்து தாம் கண்டறிந்த இந்த உண்மைகளுக்கு அறிவியல் ஆதாரங்கள் இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிட இருப்பதாகவும் டாக்டர் லி-மெங் கூறியுள்ளார்.
Comments