சிறுகுறு தொழிற்துறையினருக்கு தாழ்வழுத்த மின் உச்சவரம்பு 150 கிலோ வாட்டாக உயர்வு

0 2206
தமிழ்நாட்டில் சிறு குறு தொழிற்துறையினரின் துயரை தீர்க்கவும், தொழில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், தாழ்வழுத்த மின்னிணைப்புக்கான மேல்வரம்பு 112 கிலோ வாட்டில் இருந்து 150 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வளாகத்திற்குள் மின்மாற்றி அமைப்பதற்கான இடத்தை தர வேண்டும், உயரழுத்த மின்தேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

வளாகத்தினுள் அமைக்கப்படும் மின்கடத்திகளுக்கான பொருள் மற்றும் நிறுவுதல் செலவுகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான இதர நிபந்தனைகளை http://www.tnerc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். 112 கிலோ வாட் அல்லது அதற்கு குறைவான மின் தேவை உள்ள நிறுவனங்களுக்கு தற்போதுள்ள நடைமுறையே தொடரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments