ஊரடங்கு காலத்தில் செலவுகளைக் குறைத்துக் கொண்ட மக்கள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை குறைந்துள்ளது.
ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணத்தை செலுத்தியது குறைந்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஜனவரியில் கிரெடிட் கார்டு செலவினம் 67 ஆயிரம் கோடியாக இருந்தது ஜூன் மாதத்தில் 42 ஆயிரம் கோடியாக குறைந்தது. இதே போல் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளும் 62 ஆயிரம் கோடியில் இருந்து 47 ஆயிரம் கோடியாக சரிந்துள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழலில் அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்று கருதப்படுகிறது.
Comments