தமிழகத்திற்கு இன்றிரவு முதல் கிருஷ்ணா நதி நீர் திறப்பு
தமிழகத்திற்கு கிருஷ்ணா நதி நீர் இன்று முறைப்படி திறக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 12 டிஎம்சி நீரை ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து சாய் கங்கை கால்வாயில் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் 8 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 4 டிஎம்சி நீரை ஜூலையில் திறந்திருக்க வேண்டும். கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இப்பிரச்சினை தொடர்பாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதையடுத்து 14ம் தேதி முதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று இரவு கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
Comments