வரும் நாட்களில் சில்லறை பணவீக்கம் குறையும் - மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர்

0 2465
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன்

பல கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால், வரும் நாட்களில் சில்லறை பணவீக்கம் குறையும் என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

பணவீக்கம் அதிகரிக்க உணவுப் பொருட்களின் விநியோகம் தடைபட்டு அவை சந்தையில் அரிதாகிப் போனதே காரணம் என அவர் கூறியிருக்கிறார். அரசு புள்ளி விவரங்களின்படி கடந்த ஜூலையில் சில்லறை பணவீக்கம் 6.93 சதவிகிதமாக இருந்தது.

உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், இறைச்சி மற்றும் மீன் விலை உயர்வால் பணவீக்கமும் உயர்ந்து விட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments