மகாராஷ்டிர அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி ஆளுநரிடம் தெரிவித்தேன் - கங்கனா ரணாவத்

0 3507
மகாராஷ்டிர அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி ஆளுநரிடம் கூறியதாகவும், அவர் மூலம், தம்மை போன்ற இளம்பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி ஆளுநரிடம் கூறியதாகவும், அவர் மூலம், தம்மை போன்ற இளம்பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அவர், மும்பை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்த்தித்து முறையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

பாலிவுட் நடிகர் சுசாந்த் ராஜ்புத் சிங்கின் மரண வழக்கை மகாராஷ்டிர அரசு கையாளுவது பற்றி விமர்சனம் நடத்திய கங்கனா, மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு நிகராக ஒப்பிட்டு பேசினார். இதனால் அவருக்கும், ஆளும் சிவசேனா கூட்டணி அரசுக்கும், மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கங்கனாவின் வருகையை முன்னிட்டு ஆளுநர் மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments