2021 மார்ச் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - மத்திய சுகாதார அமைச்சர்

0 3485
மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன்

கொரோனா தடுப்பூசி வரும் மார்ச் மாதத்திற்குள் தயாராகி விடும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி குறித்து மக்களுக்கு ஏதாவது நம்பிக்கையின்மை இருந்தால், அதை போக்க, தாமே முதல் நபராக தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார். டிஜிட்டல் உரை ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், தடுப்பூசி தயாரானதும் முன்கள கொரோனா பணியாளர்கள், மூத்த குடிமக்கள், வேறுபல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அது போடப்படும் என்றார்.

பொருளாதார வசதியை பொருட்படுத்தாமல், யாருக்கு முதலில் தேவையோ அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றார் அவர். தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, அவசரத் தேவை, தயாரிப்புக்கான காலம் உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசனை நடப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments