ரூ. 250 கோடி மதிப்பில் மண்டபம் பாம்பன் இடையே கடலில் புதிதாகக் கட்டப்பட உள்ள தூக்குப் பாலம் குறித்த காட்சி
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இடையே கடலில் புதிதாகக் கட்டப்பட உள்ள தூக்குப் பாலம் குறித்த காட்சியை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மண்டபம் - பாம்பன் இடையே இப்போதுள்ள ரயில்பாலத்துக்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைத் தடம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இதற்காகக் கடலின் நடுவே தூண்கள் அமைப்பதற்காகத் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதிதாக அமையும் தூக்குப் பாலம் எப்படி இருக்கும் என்கிற அனிமேசன் காட்சியை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரம் கடலில் அமையவுள்ள புதிய ரயில்வே தூக்கு பாலம் மாதிரி படம். @narendramodi @RailMinIndia @GMSRailway @airnews_Chennai @DDNewsChennai @ROBCHENNAI_MIB
— PIB in Tamil Nadu ?? (@pibchennai) September 13, 2020
Courtesy: @PiyushGoyal pic.twitter.com/xUHpae9ZUa
Comments