சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கில் நாளை தொடங்குகிறது பாதுகாப்புப் பணியில் 1500 காவலர்கள்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நாளை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதைச் சுற்றி 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா சூழலில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றக் கட்டடத்துக்கு மாற்றாகக் கலைவாணர் அரங்கத்தில் நாளை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது.
இதனால் மாநகரக் காவல் தெற்கு கூடுதல் ஆணையர் தினகரன் தலைமையில் இரண்டு இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள் கண்காணிப்பில் கலைவாணர் அரங்கத்தைச் சுற்றி 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். .
வெடிகுண்டு கண்டறியும் வல்லுநர்களும் சோதனை செய்து வருகின்றனர். கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலைகளில் ஐம்பதுக்கு மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை வைத்து கண்காணித்து வருகின்றனர்.
முதலமைச்சர், அமைச்சர்கள்,சபாநாயகர் உள்ளிட்டவர்கள் வரத் தனிப்பாதையும், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் வரத் தனிப்பாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments