அதிக வரி, வட்டி விகிதம் வாகன உற்பத்தித் தொழிலுக்குத் தடைக்கற்கள் - போர்ஸ் மோட்டார்ஸ்

0 2671
அதிக வரி, வட்டி விகிதம் வாகன உற்பத்தித் தொழிலுக்குத் தடைக்கற்கள் - போர்ஸ் மோட்டார்ஸ்

அதிக வரி விகிதமும், அதிக வட்டி விகிதமும் வாகன உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக இருப்பதாக போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனேயைச் சேர்ந்த போர்ஸ் மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், தொழில்நுட்பம், பொருட்கள், ஆலைகள், வணிக நடைமுறைகள் ஆகியவற்றுக்கு அதிக முதலீடு தேவைப்படும் நிலையில், உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் முதலீட்டுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வளர்ந்த நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிடும் போது 6 முதல் 8 விழுக்காடு வரை வேறுபாடு உள்ளதாகவும், இது பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் சரக்கு சேவை வரி, சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் வாகன மதிப்பில் 50 விழுக்காடு அளவுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments