அதிமுக இளைஞர் பாசறைக் கூட்டத்தில் அமைச்சர் முன்னிலையில் அடிதடி, ரகளை

0 6126

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அதிமுக இளைஞர் பாசறை ஆலோசனை கூட்டத்துக்குள் அதே கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் புகுந்து ரகளையில் ஈடுபட்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.

ஸ்ரீரங்காபவனம் திருமண மண்டபத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அதிமுக மீனவர் அணி மாவட்டச் செயலாளர் கண்ணதாசன் 50க்கும் மேற்பட்டோருடன் வந்து தனக்கு ஒன்றிய செயலாளர் பதவி தரப்படவில்லை எனக் கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

மேடையில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அங்கிருந்த சேர்களையும் அடித்து நொறுக்கினர். தாக்குதலில் காயமடைந்த நிர்வாகிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments