பாகிஸ்தானில் குழந்தைகள் கண் எதிரே தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை தூக்கிலிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பாகிஸ்தானில், குழந்தைகள் கண் எதிரே தாயை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை தூக்கிலிட வலியுறுத்தி, பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய் இரவு, லாகூரின் புறநகர் பகுதியில் தன் இரு குழந்தைகளுடன் பெண் ஒருவர் காரில் சென்ற போது, பெட்ரோல் தீர்ந்து கார் நின்றது.
அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்தனர்.
வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி, இரவில் தனியாக சென்றது பெண்ணின் தவறு என தெரிவித்ததால், அவரை பணியிடை நீக்கம் செய்யுமாறு, முக்கிய நகரங்களில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, ஆயிரக்கணக்கான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Comments