80 சதவீத ஐசியூ படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க, தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவு

0 1275
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் ஐசியூ படுக்கைகளில் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் ஐசியூ படுக்கைகளில் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

50 படுக்கைகளுக்கு மேல் வசதி உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவித்துள்ள டெல்லி சுகாதார அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின், இதுவரை 33 தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் சனிக்கிழமை மட்டும் 4,321 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments