நாடு முழுவதும் இன்று நீட் தேர்வுக்காக 16 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்
மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. சுமார் 16 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைறெ இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவியிருக்கும் நிலையில் 16 லட்சம் மாணவர்கள் இன்று நீட் தேர்வை நேரடியாக எழுத உள்ளதால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் தேர்வு எழுதும் மையங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் 24 மாணவர்களுக்கு மிகாமல் தேர்வுகள் நடைபெறும். அதுவும் ஒரு அறையில் 12 மாணவர்கள் என்ற நிலையில் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தேர்வு அறைகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுத வரும் மாணவ மாணவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துள்ளன.
மாணவர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் போது, ஹால் டிக்கெட் மற்றும் ID Proof கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தின் படி, மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வெளிப்படைத்தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் கட்டாயம். நீட் விண்ணப்ப படிவத்தில் உள்ள Passport Size புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வர வேண்டும்.
50 மி. அளவுள்ள கிருமி நாசினி எடுத்து வரலாம். கிருமி நாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், 6 அடி தனி மனித இடைவெளியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments