இணைய வழி வாக்குச் செலுத்தும் முறை பற்றி ஆராயும் வல்லுநர் குழு
இணைய வழியில் வாக்குச் செலுத்துவதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது பற்றித் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஆராய்ந்து வருகிறது.
பிலாய், மும்பை, சென்னை ஐஐடிக்கள், தேசியத் தகவலியல் மையம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் 4 பேரைக் கொண்ட குழுவைத் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
இணையவழி வாக்குச் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துமுன் அதில் எழும் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க வேண்டியுள்ளதாக இந்தக் குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல்கள், வாக்குகளைச் சேமித்து வைத்தல் ஆகியவை குறித்துத் தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு இந்தக் குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
Comments