பாகிஸ்தான் எல்லை அருகே ஏகே 47 உள்ளிட்ட துப்பாக்கிகள் கண்டெடுப்பு

0 1884
பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை அருகே 5 எந்திரத் துப்பாக்கிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை அருகே 5 எந்திரத் துப்பாக்கிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.

பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே வயல்வெளியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குக் கிடந்த ஒரு பையில் 3 ஏகே 47 வகைத் துப்பாக்கிகள், 2 எம் 16 வகைத் துப்பாக்கிகள் ஆகியன இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

ஏகே 47 துப்பாக்கியில் பயன்படுத்தும் 91 தோட்டாக்கள், எம் 16 துப்பாக்கியில் பயன்படுத்தும் 57 தோட்டாக்கள், 2 கைத்துப்பாக்கிகள், அவற்றில் பயன்படுத்தும் 20 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments