சுத்திகரிப்பு வளாகத்தில் உளவு பார்த்த அமெரிக்க உளவாளி கைது-வெனிசுலா அதிபர்
வெனிசுலாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகத்தில் உளவு பார்த்த ஒரு அமெரிக்க உளவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலா மதுரோ தெரிவித்துள்ளார்.
வடமேற்கு மாநிலமான பால்கனில் உள்ள அமுவே, கார்டன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து தகவல்களை திருட முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் மதுரோ அறிவித்தார்.
அந்த நபர் ஈராக்கின் சிஐஏ தளத்தில் கடற்படை வீரராக பணியாற்றியதாகவும், கைது நடவடிக்கையின்போது ஆயுதங்கள், அமெரிக்க டாலர்கள் உள்பட ஏராளமான கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments