மார்ச் மாதத்துக்கு பிறகு முதன்முறையாக ஜீரோ கொரோனா உயிரிழப்பு பதிவு-கனடா அரசு
கனடாவில் மார்ச் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக ஜீரோ கொரோனா உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கனடாவில் நேற்று ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளது. அதே சமயம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து 9 ஆயிரத்து 163 ஆக உள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களில் மட்டும் கொரோனா பரவலை சமாளிக்க புதிய தடை உத்தரவுகளை அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments