கங்கனா ரனாவத் குடும்பத்துடன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் அவரது குடும்பத்தினரும், பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் தனது மகளுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக கங்கனாவின் தாயாரும், முன்னாள் சமஸ்கிருத ஆசிரியையுமான ஆஷா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
தாங்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் என்பதை அறிந்திருந்தும், தங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக இருந்ததாக அந்த வீடியோவில் ஆஷா கூறியிருந்தார். இந்நிலையில் தான் கங்கனா குடும்பத்துடன் பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாத போதும், இமாச்சல பிரதேச பாஜகவினரும் கங்கனா குடும்பத்தினருக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.
Comments