அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலாரசின் விக்டோரியா அசரெங்காவும் மோதுகின்றனர்

0 1321
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலாரசின் விக்டோரியா அசரெங்காவும் மோதுகின்றனர்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலாரசின் விக்டோரியா அசரெங்காவும் மோதுகின்றனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஏழுக்கு ஆறு, மூன்றுக்கு ஆறு, ஆறுக்கு மூன்று என்கிற செட் கணக்கில் வெற்றிபெற்ற நவோமி ஒசாகா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா வெற்றிபெற்றார். இறுதி ஆட்டத்தில் நவோமி ஒசாகா - விக்டோரியா அசரெங்கா இருவரும் மோத உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments