கங்கனா ரனாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட விவகாரம் - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

0 1541
கங்கனா ரனாவத்துக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட விவகாரம் - மத்திய இணை அமைச்சர் விளக்கம்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு அவரது தந்தையின் கோரிக்கையின் பேரிலேயே ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரை சந்தித்து கங்கனாவின் தந்தை, தனது மகளுக்கு மிரட்டல்கள் வருவதாகவும், எனவே தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் கூறிய அமைச்சர், இதையடுத்து அம்மாநில அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே கங்கனாவுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் ஒய்-பிளஸ் பாதுகாப்புக்கான கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என்பது குறித்த தகவல்கள் எதையும் கிஷன் ரெட்டி தெளிவாக கூறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments