விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கிசான் திட்டத்தில் மோசடி செய்யப்பட்ட ரூ.7.76 கோடி மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கிசான் திட்டத்தில் நிதி பெற்ற 42 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதில் 7 கோடியே 76 லட்சம் ரூபாய் இதுவரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பதிவு செய்த 70 ஆயிரம் பேரில் 42 ஆயிரம் பேர் போலி பயனாளிகள் என கண்டறியப்பட்டு அவர்கள் வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 19 ஆயிரத்து 330 பேரிடம் 6 கோடியே 26 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டது.
வங்கி கணக்கில் தொகை இல்லாதவர்களிடம் வீட்டிற்கே சென்று பணத்தை திரும்பப்பெறும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Comments